நமை தொட்டவர் நெஞ்சினை கீறிடு - வைரலாகும் அருண் விஜய் பட பாடல்

எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது

நமை தொட்டவர் நெஞ்சினை கீறிடு - வைரலாகும் அருண் விஜய் பட பாடல்

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அச்சமே அச்சமே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் வரிகள் எழுதி பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

https://youtu.be/g65j-2MG_0A