பெருமளவு சனத்திரளுடன் சாந்தனின் இறுதி ஊர்வலம் - வீதியெங்கும் உறவுகள் கண்ணீர் கதறல்

மறைந்த சாந்தனின் (தில்லையம்பலம் சுதேந்திரராஜா) புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று பெருமளவு சனத்திரள் மத்தியில் கண்ணீர் கதறலுடன் இறுதி ஊர்வலம் இடம்பெற்று வருகின்றது.

உடுப்பிட்டி - இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமயச் சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.

சாந்தனின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளால் புகழுடலுக்கு வாய்க்கரிசி போடப்பட்டு ஊர் மக்களால் அருகில் உள்ள சனசமூக நிலையத்துக்குப் புகழுடல் தாங்கிச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்றன.

இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமூக நிலையம் ஊடாக - தர்மகுலசிங்கம் சனசமூக நிலையம் ஊடாக - வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையம் ஊடாக -  நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாகப் பயணிக்கின்றது.

இறுதி ஊர்வலம் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவு பெறவுள்ளது. அங்கு புகழுடல் நல்லடக்கம செய்யப்படவுள்ளது.

சாந்தனின் புகழுடல் தாங்கிய இறுதி ஊர்வலத்தில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் கடந்த 28ஆம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.