மைத்திரி தாவ போவது சஜித் பக்கமா? ரணில் பக்கமா?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மைத்திரிபால சிறிசேன தனது ஆதரவை தெரிவிக்க விரும்பினாலும், அந்த கோரிக்கையை அவர், நிராகரித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மைத்திரி தாவ போவது சஜித் பக்கமா? ரணில் பக்கமா?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மைத்திரிபால சிறிசேன தனது ஆதரவை தெரிவிக்க விரும்பினாலும், அந்த கோரிக்கையை அவர், நிராகரித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன போன்ற நம்பிக்கையற்ற நபரின் ஆதரவை தாம் ஒருபோதும் விரும்பவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போது எங்கும் இல்லாத நிலையில் இருக்கிறார்.

எந்தக் கட்சியும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் தன்னம்பிக்கையை நீங்கள் அழிக்கும்போது, ​​​​ஆதரவின்றியே இருக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இவ்வளவு தாழ்வான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது எமக்கு வருத்தமளிக்கிறது“ என்றார்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது சாதகமான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிறிசேன அப்படிச் சென்றால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

என்றாலும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் மைத்திரிபால சிறிசேன இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது.