கெர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் பெறுபேறுகளை புகழ்ந்த அரவிந்தகுமார் 

எமது பெற்றோர்கள் 200 வருட காலம் தேயிலை மலைகளில் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து கஷ்டப்பட்டது போதும் அவர்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவிக்க இடமளிக்க முடியாது.

கெர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் பெறுபேறுகளை புகழ்ந்த அரவிந்தகுமார் 

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட்  இலக்கம் 02 தமிழ் வித்தியாலயத்தின் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் மாணவர்களால் பெற்ற  பெறுபேறுகள் பெருமையாக போற்றப்பட கூடியது என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட்  மத்திய பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை  தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,

இந்த பெறுபேறுகளை பெற்று கொடுத்த மாணவர்கள் எதிர்காலங்களில் பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டதாரியாக வரக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றது. பாடசாலையின் வரலாற்றை நோக்குகின்ற பொழுது இந்த பாடசாலையில் படித்து வெளியேறிய ஏராளமான மாணவர்கள் சகல அரச துறைகளிலும் உள்வாங்கியிருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் கல்வி கற்றவுடன் தமது பிள்ளைகளை மலையகத்திலிருந்து கொழும்பு பகுதிக்கு பணியாளர்களாக அனுப்பப்படுகின்றனர் அந்த நிலைமை தற்பொழுது மாற்றமடைந்து மலையகத்தில் கல்வி மான்கள் உருவெடுத்து வருகின்றனர்.

இந்த காலப்பகுதியில் மாணவர்கள் அவர்களது விருப்பத்துக்குரிய பாடசாலையில் கல்வி கற்பதட்குரிய  நடவடிக்கைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியினை வழங்க வேண்டுமென பெற்றோர்கள் காணப்படுகின்றனர்.

எமது பெற்றோர்கள் 200 வருட காலம் தேயிலை மலைகளில் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து கஷ்டப்பட்டது போதும் அவர்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவிக்க இடமளிக்க முடியாது. ஏனெனில் அந்நிய செலவாணியை ஈட்டித்தருவது எமது பெற்றோர்கள் இந்த நாட்டை வளப்படுத்தியவர்கள் நாங்கள் அதற்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை

நான் அரசியல் கற்றது அமரர் சந்திரசேகரனிடம் அவருடைய  பாசறையில்தான் எனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றேன். எனக்கு வாக்களித்த பிரதேசத்திற்கு மாத்திரம் எனது பணியினை முன்னெடுக்கவில்லை.

864 பாடசாலைகளுக்கும் 2 இலட்சத்து 12 ஆயிரம் மாணவ செல்வங்களுக்கும் எனது சேவையினை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றேன். அனைத்து பாடசாலைகளுக்கும் பல மில்லியன் ரூபா செலவில் உபகரணங்கள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்பாக வழங்கப்படும் அந்த வகையில் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட்  இலக்கம் 02 தமிழ் வித்தியாலயத்திற்கு 1 duplo இயந்திரம் 01 ஸ்மார்ட் டிவி 01 மடி கணினி என்பன வழங்கப்பட்டும் என குறிப்பிட்டார் 

(செய்தி - பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்)