மகிந்த அமரவீரவுக்கு அரவிந்தகுமார் அனுப்பியுள்ள கடிதம் 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள மடுல்சீமை, பிட்டமாறுவ, பேசன் ஆகிய பிரதேங்களை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு மற்றும் கைத்தொழில் ஊக்குவிப்பு வலயமாக மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் லுணுகலை பிரதேச சபைக்குட்பட்ட அதிகாரத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகிந்த அமரவீரவுக்கு அரவிந்தகுமார் அனுப்பியுள்ள கடிதம் 

பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மடுல்சீமை, பிட்டமாறுவ, பேசன் ஆகிய பிரதேங்களை கவர்ச்சிமிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாக் கைத்தொழில் வலயங்களாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மடுல்சீமைப் பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கென மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்துக்குரிய காணியொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு ஆவன செய்யுமாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு அனுப்பிவைத்துள்ள கடதத்தில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் மேலும் கூறியுள்ளதாவது,

மேற்குறிப்பிடப்பட்டுள்ள மடுல்சீமை, பிட்டமாறுவ, பேசன் ஆகிய பிரதேங்களை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு மற்றும் கைத்தொழில் ஊக்குவிப்பு வலயமாக மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் லுணுகலை பிரதேச சபைக்குட்பட்ட அதிகாரத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி சுற்றுலாக் கைத்தொழில் வலயங்களாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மடுல்சீமைப் பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கென மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்துக்குரிய காணியொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு என்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேற்குறித்த செயற்றிட்டம் நடை முறைப்படுத்தப்படும் பட்சத்தில் அது நம்நாட்டு பொருளாதார வருவாய்க்கு உந்து சக்தியாக இருப்பதோடு சுய தொழில் வாய்ப்புகளுக்கும் வழிவகுப்பதாய் அமையும் என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

ஆகவே இத்திட்டம் வெற்றிபெறுவதற்கு மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழுள்ள காணியொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு ஆவன செய்யுமாறு தயவாக கேட்டுக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள் மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி, லுணுகலை பிரதேச சபை செயலாளர் மற்றும் இணைப்பதிகாரி அகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன.

(செய்தி - பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்)