சு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் தயாசிறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்

சு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் தயாசிறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார் அனுமதிக்காத நிலையில் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகிறது

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர தனது கடமைகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்

மேலும் கட்சியின் சட்டபூர்வமான பொதுச் செயலாளராக தாம் இன்னமும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.