வெறித்தனமாக workout செய்யும் ஹர்திக் பாண்டிய 

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முன்னோக்கி செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே என தலைப்பிட்டிருந்தார்.

வெறித்தனமாக workout செய்யும் ஹர்திக் பாண்டிய 

ஒருநாள் உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடியது. இதில், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 என்று டி20 தொடரை கைப்பற்றியது. 

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்து வரலாறு படைத்தது.

தென் ஆப்பிரிக்கா தொடரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால், காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் அவர் இடம் பெறவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெற்றனர். ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முன்னோக்கி செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே என தலைப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள், இப்படியே போனால் ஐபிஎல் தொடரிலும் உலகக் கோப்பையிலும் கேப்டன் பதவி கிடைக்காமல் போய்விடும் என பயந்து இந்த வீடியோவை வெளியீட்டுள்ளதாகவும் இதனால் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.