டி20 தரவரிசை - முதலிடத்துக்கு முன்னேறிய ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா இரண்டு இடங்கள் முன்னேறி, இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்காவுடன் முதல் இடத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால், சகலத்துறை ஆட்டக்காரர்களுக்கான டி20 தரவரிசைப் பட்டியலில் அவர் முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா இரண்டு இடங்கள் முன்னேறி, இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்காவுடன் முதல் இடத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தில் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் 150 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொடுத்ததுடன் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
இறுதிப் போட்டியில் கிளாசனின் விக்கெட்டை வீழ்த்தியதே தென்னாப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பை பறிக்க முக்கிய திருப்புமுனையாக இருந்தது.
அத்துடன், பதற்றமான இறுதி ஓவரையும் அவர் வீசியிருந்தார். இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணிக்கு 8 ஓட்டங்களை மாத்திரமே பாண்டியா விட்டுக்கொடுத்தார்.
மார்கஸ் ஸ்டோனிஸ், சிக்கந்தர் ராசா, ஷாகிப் அல் ஹசன் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.
Editor