மலையக தியாகிகள் தினம் நுவரெலியாவிலும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

மலையக தியாகிகளுக்காக நுவரெலியா நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி வளாகத்திலேயே நிகழ்வு நடைபெற்றது.

மலையக தியாகிகள் தினம் நுவரெலியாவிலும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

மலையக தியாகிகள் தினத்தையொட்டி, மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நுவரெலியாவில் நேற்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

மலையக தியாகிகளுக்காக நுவரெலியா நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி வளாகத்திலேயே நிகழ்வு நடைபெற்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக நினைவு கூறி மலையக தியாகிகள் நாள் நினைவுக்கூரப்படுகிறது.

மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து சர்வமத தலைவர்கள் சமய நிகழ்வுகளுடன் நினைவு தூபிக்கு மலர் தூவி குறித்த நினைவேந்தலை மேற்கொண்டனர்.

மலைக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் , ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் , மலைக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் புஷ்பா விஸ்வநாதன் , மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ராஜாராம் , ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மஹிந்த சில்வா , வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களான தேவப்பிரியா , அரிச்சந்திரன், ஜனார்த்தன் மற்றும் பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தியாகிகளின் உறவினர்களும் தொழிற்சங்கவாதிகளும் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றனர்.

மலையக தியாகிகள் தினம் ஜனவரி 10 திகதியாகும். அன்றைய தினம் கொட்டகலையிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - நானுஓயா நிருபர்