பெண் சிறைக்கைதிகளை பார்வையிட்ட அமைச்சர் சரோஜா சாவித்திரி!

பெண் சிறைக்கைதிகளை பார்வையிட்ட அமைச்சர் சரோஜா சாவித்திரி!

சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் 2025 புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் (01) வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, அங்குள்ள பெண் கைதிகளை சந்தித்துத்துடன், பெண் கைதிகளின் நலன்கள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தக்கொண்டார்.


அத்துடன்,  பெண் கைதிகளுக்கான அத்தியாவசிய பொருட்களுடன் பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில், சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர். ஓல்கா மற்றும் அவரது அமைச்சின் ஏனைய உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.