கதிகலங்கி உள்ள முன்னாள் அமைச்சர்கள் - பாதாள உலக குழுவுடன் தொடர்பா?
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குற்றக் கும்பல்களுடன் தொடர்புகளை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற உயர் மட்ட நபர்களின் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் விரைவில் அவையில் அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பல முன்னாள் அமைச்சர்களை கதிகலங்கச் செய்துள்ளது. கடந்த காலத்தில் பல அரசியல்வாதிகளுக்கு பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த போதிலும் எவரின் பெயரும் வெளியாகியிருக்கவில்லை. இந்த பின்புலத்தில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Editor