தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

அகரபதன பிளான்டேஷன் லிமிடெட் உள்ளிட்ட 21 தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதியரசர் சோபித ராஜகருணா முன்னிலையில் இன்று (31) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாகுமாறு கோரி தோட்ட கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அகரபதன பிளான்டேஷன் லிமிடெட் உள்ளிட்ட 21 தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதியரசர் சோபித ராஜகருணா முன்னிலையில் இன்று (31) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தொழிலாளர் ஆணையாளர் உட்பட 52 பேரை மனுதாரர்கள் பெயரிட்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர் ஒருவனின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக நிர்ணயம் செய்து தொழில் அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை தன்னிச்சையாக  வெளியிட்டுள்ளதாக மனுவில் உள்ள தோட்டக் கம்பனிகள் சுட்டிக்காட்டுகின்றன. 

தொழிலாளர் துறை அமைச்சர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு நீதியின் சட்டக் கோட்பாட்டை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

எனவே, இந்த முடிவை அரசு தன்னிச்சையாக எடுத்ததாக கூறி, அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

தொழில் அமைச்சரின் வர்த்தமானியில் பிரகாரம் தோட்டத் தொழிலாளர் ஒருவனின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,350 (அடிப்படை), உதவித் தொகையாக ரூ.300 மற்றும் மற்றொரு உதவித்தொகை ரூ.80 என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.