பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை - 192 ஓட்டங்களால் வெற்றி

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Mendis 93 ஓட்டங்க​ளையும்,  Kamindu Mendis ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களையும், Dimuth Karunaratne 86 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Dhananjaya de Silva 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை - 192 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை அணிக்கும்  பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

Chattogramயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Mendis 93 ஓட்டங்க​ளையும்,  Kamindu Mendis ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களையும், Dimuth Karunaratne 86 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Dhananjaya de Silva 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Shakib Al Hasan 3 விக்கெட்டுக்களையும், Hasan Mahmud 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் Zakir Hasan 54 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Asitha Fernando 4 விக்கெட்டுக்களையும், Vishwa Fernando,Lahiru Kumara, Prabath Jayasuriya ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

353 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி  7 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் Angelo Mathews 56 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில்  பங்களாதேஷ் அணி சார்பில் Hasan Mahmud 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்படி, பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

511 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் ஆட்டமிழக்காமல் Mehidy Hasan Miraz 81 ஓட்டங்களயும்,  Mominul Haque 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Lahiru Kumara 4 விக்கெட்டுக்களையும், Kamindu Mendis 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.