அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான் அணி!

இதேவேளை பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடிய நேரத்தில், போட்டி மழையால் அவ்வப்போது தடைபட்டது

அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான் அணி!

2020 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வென்ற முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ஒட்டங்களை எடுத்தது.


இதேவேளை பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடிய நேரத்தில், போட்டி மழையால் அவ்வப்போது தடைபட்டது.

அதன்படி, டக்வட் லூயிஸ் கோட்பாட்டின் படி பங்களாதேஷ் அணியின் வெற்றி இலக்காக 19 ஓவர்களில் 114 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

114 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்கள் முடிவில் 105 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றள்ளமை குறிப்பிடத்தக்கது