2023 உலகக் கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்!

ஆண்களுக்கான 2023 ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

 நவம்பர் 19  ஆம்  திகதிவரை  நடைபெறும் இச்சுற்றுப்போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

2 தடவைகள் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் இம்முறை முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றவில்லை.

இந்தியாவின் 10 நகரங்களில் மொத்தமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ளன.

 இங்கிலாந்து -  நியூஸிலாந்து மோதல்

இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்புச் சம்பியனான இங்கிலாந்தும், கடந்த தடவை இறுதிப்போட்டியில் பங்குபற்றிய நியூஸிலாந்தும் மோதவுள்ளன. 

அஹமதாபாத் நரேந்திர மோடி அரங்கில் பிற்பகல் 2 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் உலகக் கிண்ணப் போட்டிகளிலும்  இவ்விரு அணிகளும் ஏறத்தாழ சம எண்ணிக்கையான வெற்றிகளைப் பெற்றுள்ளன.

அஹமதாபாத் நரேந்திர மோடி அரங்கில் பிற்பகல் 2 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் உலகக் கிண்ணப் போட்டிகளிலும்  இவ்விரு அணிகளும் ஏறத்தாழ சம எண்ணிக்கையான வெற்றிகளைப் பெற்றுள்ளன.


13 ஆவது தடவையாக உலகக்கிண்ண சுற்றுப்போட்டி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 4 ஆவது தடவையாக இச்சுற்றுப்போட்டி நடைபெறுகிறது.

எனினும், இந்தியாவில் மாத்திரம் ஆண்கள் உலகக்கிண்ண சுற்றுப்போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

பரிசுகள்

இச்சுற்றுப்போட்டியில் மொத்தமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (325 கோடி ரூபா) பணப் பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.

 சம்பியனாகும் அணிக்கு 4 மில்லியன் டொலர்கள் (சுமார் 130 கோடி ரூபா) வழங்கப்படும். 2 ஆம் இடம் பெறும் அணிக்கு 2 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும். அரை இறுதி வரை முன்னேறும் ஏனைய 2 அணிகளுக்கும் தலா 8 இலட்சம் டொலர்கள் வழங்கப்படும். ஒவ்வொரு லீக் போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு தலா 40,000 டொலர்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் லீக் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கும் மேலும் தலா ஒரு இலட்சம் டொலர்கள் வழங்கப்படும்.