மியான்மர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் பணி தீவிரம்

மியான்மரில் சிக்கியுள்ள 56 இலங்கையர்களை அவசர நடவடிக்கை மூலம் விடுவிக்க மியான்மர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மியான்மர் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், தீவிரவாத கும்பலுடன் பேச்சுவார்த்கைளை விரைவாக முன்னெடுக்க மியான்மர் அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் BINSTIC தூதர்கள் மியான்மர் வெளியுறவுத்துறை துணை அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையும் சாதகமான முறையில் முடிவடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிக்கியுள்ளவர்களை உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.