ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல்: மீண்டும் புடின் ஆட்சி அமைக்கிறார்? 

விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக மீண்டும் ஜனாதிபதியாகும் நோக்கில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல்: மீண்டும் புடின் ஆட்சி அமைக்கிறார்? 

உன்ரைனுடனான போருக்கு மத்தியில் ரஷ்யாவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இன்றுமுதல் மார்ச் 17ஆம் திகதிவரை மூன்று நாட்களுக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. விளாடிமிர் புடினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக மீண்டும் ஜனாதிபதியாகும் நோக்கில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மாஸ்கோ LEVADA மையம் நடத்திய அண்மைய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதமான மக்கள புடின்தான் தேர்தலில் வெற்றிபெறுவார் எனக் கூறியுள்ளனர்.

மீண்டும் புடின் வெற்றி பெற்றால், உக்ரேனுக்கு எதிராக கடும் தாக்குதலை தொடுத்த அவரின் அதிகார சாம்ராஜியம் இன்னும் அதிகமாகலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக சுமார் 20 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார்.

உக்ரேனுக்கு எதிராக, கொடூர தாக்குதலை நடத்திம் உலக அளவில் கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு ஆளான புடின், பல நெருக்ககளுக்கு மத்தியில் தேர்தலை எதிரிகொள்கிறார்.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரஷ்யாவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அணுவாயு யுத்தத்துக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக நேற்றுமுன்தினம் புடின் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் இடம்பெறுவதால் அனைத்து நாடுகளும் ரஷ்யாவை உற்று நோக்கியுள்ளன.