கட்சிகளை உடைக்கும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் ரணில் -  இராதா

இந்த நாட்டிலே பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக இரண்டு தேர்தலுக்கு செலவழிக்கின்ற செலவை ஒரே தேர்தலில் வைக்கின்ற நடவடிக்கை எடுக்க முடியும்  அந்த வகையிலே இந்த தேர்தல் இரண்டையும் ஒன்றாக வைத்தால் செலவை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது

கட்சிகளை உடைக்கும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் ரணில் -  இராதா

கட்சிகளை உடைப்பதற்கான எதிர்பார்ப்பில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். அரச தலைவர் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுத்திருக்கின்றது. இது பெரும்பாலும் பேசப்படுகின்ற விடயமாக இருந்தாலும் இதிலே நன்மையும் இருக்கின்றது தீமையும் இருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக இரண்டு தேர்தலுக்கு செலவழிக்கின்ற செலவை ஒரே தேர்தலில் வைக்கின்ற நடவடிக்கை எடுக்க முடியும்  அந்த வகையிலே இந்த தேர்தல் இரண்டையும் ஒன்றாக வைத்தால் செலவை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அதே நேரத்தில் காட்சிகளுக்கு இடையிலே பலவிதமான குழப்பங்கள் நிலவுகின்ற காரணத்தினால் எந்த கட்சியில் இருந்து வாக்கு கேட்பது? எவ்வாறு உடைத்துக் கொண்டு செல்வது? யாரை உடைக்கலாம்? என்ற எதிர்பார்ப்புகளோடு இருக்கின்ற காட்சிகளுக்கு இது ஒரு சிக்கலாக அமையும். ஏனென்றால் அரச தலைவர் ஒருவர் வந்த பிறகுதான், அடுத்து அரச தலைவரின் கட்சி வருவது மரபாக உள்ளது. அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு வருகின்ற தலைவர் அதிகாரத்தை கைப்பற்றுகின்ற மரபு இங்கு இருக்கின்றது.

ஆனால் இந்த தேர்தல்களை ஒன்றாக வைத்தால் இந்த சிக்கல் வரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அரச தலைவராக வருவதற்கான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவர் எல்லா கட்சிகளையும் உடைத்து அவற்றை எடுப்பதற்கான வசதிகள் என்னவென அவர் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இவ்வாறான சூழ்நிலையில் அவரது கட்சியை உடைக்கின்ற விடயம் சாத்தியமற்றதாக இருக்கும் என்றார்.