மஞ்சள் கோட்டில் சாலையை கடக்க வேண்டும்; மஹிந்த கற்றுத்தந்த பாடம் குறித்து வாய்த்திறந்த பசில்

வன்முறையை ஒழித்த ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச மட்டுமே என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

மஞ்சள் கோட்டில் சாலையை கடக்க வேண்டும்; மஹிந்த கற்றுத்தந்த பாடம் குறித்து வாய்த்திறந்த பசில்

வன்முறையை ஒழித்த ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச மட்டுமே என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. 

மாநாட்டில் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச, 

‘ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதுவே எதிர்காலத்திலும் தொடரும். எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும்.

நம்முடைய அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயாராவோம். துணிச்சலான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

இந்த நாட்டு மக்களை மரண பயத்தில் இருந்து காப்பாற்றிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்சவே. அவரது வழியில் எமது உறுதியான பயணம் தொடரும். 

உங்கள் அனைவரிடமும் முன்வைக்க எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது. கிராமத்திற்கு செல்லும்போது மஞ்சள் கோட்டை தவிர வேறு எந்த இடத்திலும் சாலையை கடக்க வேண்டாம். மகிந்த ராஜபக்ச நமக்கு கற்றுத்தந்த மாபெரும் பாடத்தை பின்பற்றுங்கள்.

எதிர்காலத்தில் எமது கட்சியை முன்னுதாரண கட்சியாக கொண்டு செல்வோம். சாலையில் ஓடும் நாய் மீது கல்லை எறிந்தால் அந்த நாய் குரைத்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆனால் சிங்கத்தின் மீது கல்லை எறிந்தால் யார் கல்லை எறிந்தார்கள் என்றே பார்க்கும்.‘‘ என்றார்.