மாகாண சம்பியனாகி தேசிய போட்டிக்கு தெரிவான கம்பளை இந்து கல்லூரி மாணவன்
கம்பளை இந்து கல்லூரியில் 7ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் சாந்தகுமார் சபிசன், மத்திய மாகாண சோட்டோகான் (Shotokan) சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் 40 கிலோகிராமுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பங்கேற்ற சபிசன், முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றதுடன், தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
கம்பளை இந்து கல்லூரி அதிபர் நேரு மற்றும் பயிற்றுவிப்பாளர் எஸ்.பி. சந்திரமோகன் (JP) ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் போட்டியில் பங்கேற்ற மாணவன், தனது வெற்றியின் மூலம் கம்பளை மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், மாணவன் சபிசனை கௌரவிக்கும் நிகழ்வு கம்பளை இந்து கல்லூரி அதிபர் நேரு தலைமையில் நடைபெற்றது.
Editor