நாடு முழுதும் சுற்றிவளைப்பு ஒரே நாளில் 1,500 பேர் கைது
நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கைகளின் கீழ், ஒரே நாளில் சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (23) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின்போது மொத்தம் 27,960 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, போக்குவரத்து மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் 4,681 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேர் குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 327 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 230 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 335 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மேலும் 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கி இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Editor