ஜனவரி 16, அரசியலில் ஒரு பெரிய நாற்காலியில் மாற்றம்

அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மதித்துள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு உதயங்க வீரதுங்க வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16, அரசியலில் ஒரு பெரிய நாற்காலியில் மாற்றம்

தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை நீக்கிவிட்டு முன்னாள் பிரதமரின் செயலாளராக இருந்த காமினி செனரத்தை எதிர்வரும் 16ஆம் திகதி நியமிக்க ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மதித்துள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு உதயங்க வீரதுங்க வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பசில் ராஜபக்ஷ இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார் எனவும் அந்த நேர்காணலில், உதயங்க வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.