பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கோரல் இன்றுடன் நிறைவு!

பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கோரல் இன்றுடன் நிறைவு!

2022/23 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (05) முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு இணையவழி ஊடாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றைய தினத்தின் பின்னர் நீடிக்கப்படாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.