ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதே எமது நிலைப்பாடு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதே எமது நிலைப்பாடு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

”இலங்கை தமிழரசுக்  கட்சி, சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் சஜித் பிரேமதாசவுடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் சஜித்திற்கான ஆதரவினை குறைக்கும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.