மஸ்கெலியா - கொழும்பு புதிய பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

மஸ்கெலியா - கொழும்பு புதிய பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மஸ்கெலியா – அவிசாவளை பஸ் சேவை மீண்டும் பயணிகளின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா – நோர்வுட் வீதி வழியாக பிற்பகல் 2.15 மணிக்கு அவிசாவளை நோக்கி இயக்கப்பட்டு வந்த சேவை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளின் அடிப்படையில் அவிசாவளை டிப்போவிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் வெற்றியடைந்துள்ளன.

அதன்படி, கடந்த 17ஆம் திகதி முதல் மஸ்கெலியாவில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் புதிய பஸ் சேவை நோர்வுட் வழியாக மகரகம ஊடாக கொழும்பு நோக்கி இயக்கப்படவுள்ளது.

இந்த சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், கொழும்பு மற்றும் இடைப்பட்ட பகுதிகளுக்கு பயணிக்கும் மலையக மக்களுக்கு குறிப்பிடத்தக்க வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் இந்த தகவலை மற்றவர்களுடனும் பகிர்ந்து, புதிய சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.