2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. Ordinary Level) பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான
doenets.lk மற்றும்
results.exams.gov.lk ஊடாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது பரீட்சை இலக்கத்தை (Index Number) பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழைந்து பெறுபேறுகளைப் பார்வையிடவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றிருந்ததுடன், நாடு முழுவதும் இலட்சக்கணக்கான பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அதில் தோற்றியிருந்தனர்.
பெறுபேறுகள் தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு மாணவர்களும் பெற்றோர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.