எரிபொருளுக்கான QR பயன்பாடு தொடருமா?

எரிபொருளுக்கான QR பயன்பாடு தொடருமா?
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தின் போது பயன்படுத்தப்பட்டு வரும் QR குறியீட்டு முறை தொடர்பாக தொடர்ந்து பயன்படுத்துவதா என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்த வேகத்திற்கு இணையாக விலை குறையாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு பொதுமக்களுக்கு எந்தவித தடைகளும் இல்லை என்றும் டி. ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறை, அப்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை கட்டுப்படுத்தவும் விநியோகத்தை சமநிலைப்படுத்தவும் முக்கிய பங்காற்றியது.
இருப்பினும், தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் விநியோக சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அந்த முறை தொடர்ந்தும் அவசியமா என்பது குறித்து அதிகாரிகள் பரிசீலனை மேற்கொண்டு வருகின்றனர்.