கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலை நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பெறுபேறுகளை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் தமது பெறுபேறுகளை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான
doenets.lk மற்றும்
results.exams.gov.lk
மூலம் பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகள் வெளியானதும் இணையதளங்கள் அதிக போக்குவரத்தால் மெதுவாக இயங்கக்கூடும் என்பதால் மாணவர்கள் பொறுமையாக முயற்சிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த பெறுபேறுகள் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றன.