‘யோஷிதா இராணுவத்தில் சேர்ந்ததாலேயே போரில் வெற்றி கிடைத்தது’ 

‘யோஷிதா இராணுவத்தில் சேர்ந்ததாலேயே போரில் வெற்றி கிடைத்தது’ 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க, யோஷிதா ராஜபக்ச இராணுவத்தில் இணைந்ததன் பின்னரே நாட்டின் போருக்கு வெற்றி கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

அத்துடன், யோஷிதா ராஜபக்ச இராணுவத்தில் இணைந்ததின் பின்னர்தான் இராணுவம் பாதுகாப்பானது என கருதி நாட்டின் ஏனைய இளைஞர்களும் இணைந்ததாவகவும் அவர் கூறியுள்ளார். 

யோஷிதா ராஜபக்சவின் இராணுவச் சேவையை குறிப்பிட்டு இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். 

இவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, நாட்டின் உள்நாட்டுப் போரின் வெற்றியை ஒரே ஒருவரின் பங்களிப்புடன் இணைத்து பேசுவது சர்ச்சைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது. போரில் ஆயிரக்கணக்கான படைவீரர்கள், அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு இருந்ததாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சி.பி. ரத்நாயக்கவின் இந்தக் கருத்து, அரசியல் ஆதரவு உரையா அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் கூற்றா என்பது குறித்து பல தரப்பினரிடமும் விவாதம் நிலவுகிறது.