வாடும் மொட்டு - ஒவ்வொரு இதழ்களாக வீழ்கிறது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் 116 பேர் கொண்ட குழு இன்று (31) கூடி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் 116 பேர் கொண்ட குழு இன்று (31) கூடி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் வெற்றிக்கு ஆதரவளிப்பதாக அந்தக் குழுவினர் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
116 பேர் கொண்ட இந்தக் குழு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவில் 60 சதவீதத்திற்கும் மேலான உறுப்பினர்கள் தற்போது ரணிலை ஆதரித்துள்ளனர். உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் ரணிலுக்கு கிடைத்தால் அக்கட்சியின் கட்டமைப்பு கடுமையான சரிவை சந்திக்கும் என்பதுடன், ராஜபக்சர்களும் அவர்களுக்கு சார்பான ஒருசிலருமே எஞ்சியிருக்கும் சூழ்நிலை ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Editor