தாக்கல் செய்த அனைத்து வேட்புமனுகள் ஏற்பு
2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 39 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகவும் பரிசீலித்தப்பின்னர் அவற்றை ஏற்றுக்கொண்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையில் இராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மூன்று ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றதாக கூறிய தேர்தல் ஆணைக்குழு, அவற்றை நிராகரித்துவிட்டதாகவும் கூறியது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 40 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்த போதிலும் 39 பேர் மாத்திரமே வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
Editor