இந்தியாவின் அவதானத்தை பெற்றுள்ள அநுர

இலங்கை அரசியலிலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென பல்வேறு தரப்பினரால் கணிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயல்பாடுகளை இந்தியா அவதானம் செலுத்தியுள்ளது.

இந்தியாவின் அவதானத்தை பெற்றுள்ள அநுர

இலங்கை அரசியலிலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென பல்வேறு தரப்பினரால் கணிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயல்பாடுகளை இந்தியா அவதானம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆதரவு இருப்பதாக அண்மையில் வெளியான சில கருத்துக் கணிப்புகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.

கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னரே தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு நாடு முழுவதும் பரவலாக அதிகரித்தது.

இலங்கையில் உள்ள பன்நாட்டு இராஜதந்திரிகள் அடிக்கடி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்களுடன் சிநேகப்பூர்வமான கலந்துரையாடல்களையும் நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று உலகளாவிய ரீதியில் கட்சியின் கட்டமைப்பையும் தேசிய மக்கள் சக்தி வலுப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் மேலும் இருவரும் இன்று (05) காலை புதுடில்லிக்கு பயணித்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் கட்சி முதலில் மக்கள் விடுதலை முன்னணியினால் கட்டமைக்கப்பட்டதுடன், அந்தக் கட்சி முன்பு இந்தியாவுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றியது.

இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் போது, ​​ மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே அதற்கு எதிராக செயல்பட்டு இந்திய விரிவாக்கத்திற்கு எதிரான ஒரு சித்தாந்தத்தை வழிநடத்தியது.

இந்தியாவின் தலையீட்டுடன் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இலங்கையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்படுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படும் போது அவர்களுக்கு நடத்தப்பட்ட ஐந்து வகுப்புகளில் ​​ இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி கற்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சிறந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்தியாவுடன் செயற்பட தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்னர் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க அனுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.