2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த அரச செலவினம் 8 டிரில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இதனை அடுத்து வரும் அரசாங்கத்தின் பாதீட்டில் இந்த செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் வருமானங்களை எவ்வாறு ஈட்டுவது என்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

முன்னதாக அரச பணியாளர்களுக்கு  கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன எனினும் தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு 20ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.