ரணிலால் பிளவுபட்ட மொட்டுக் கட்சி : கோபமடைந்த நாமல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிப்பதன் விளைவு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிளவு என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிப்பதன் விளைவு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிளவு என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாமல் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கினோம்.எமக்குப் பொருத்தமில்லாத விடயங்களை அவர் செய்தாலும் இன்றுவரை நாங்கள் எதுவும் கூறவில்லை.
எனினும், கட்சி இரண்டாகப் பிளவுபட்டதுதான் கட்சியாக எமக்குக் கிடைத்த பரிசு.எனவே, எதிர்காலத்தில் அரசியல் முடிவை எடுப்போம்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு நாங்கள் உண்மையாகவே உதவி செய்தோம். அவர் இவ்வாறு செய்வது பொதுஜன பெரமுனவிற்கு அல்ல.அது அவரின் பழக்கம்.
ஐ.தே.க, சுதந்திரகட்சி, நல்லாட்சி அரசாங்கம், ஜே.வி.பி மற்றும் விடுதலை புலிகள் அனைத்தும் பிளவுபட்டது, அவரை கட்சிக்கு அழைத்து வந்த போதே எமக்கு தெரியும்.
நாங்கள் இன்னும் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி வருகிறோம். பொருத்தமான இடத்திற்கு வந்தால் ஒரு அரசாங்கத்தைப் பற்றி கலந்துரையாட நாங்கள் தயார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள அனைவருடனும் ஆலோசித்து வருகிறோம். அதன் பிறகு இறுதி முடிவு எடுப்போம்." என தெரிவித்துள்ளார்.
Editor