கெரவலப்பிட்டி அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் குப்பை மேட்டில் தீப்பரவல்
கெரவலப்பிட்டி அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தற்போது திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் குவிக்கப்பட்டிருந்த குப்பை மேட்டிலே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குப்பைகளில் பரவிய தீயினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டுள்ளது.
தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீவிர அணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Editor