நேபாள பிரதமரை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில்!

நேபாள பிரதமரை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி ஆகியோருக்கிடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று நேபாளம் - காத்மண்டு நகரில் இடம்பெற்றது. இந்திய விஜயத்துக்கு மத்தியில் கடந்த திங்களன்று முன்னாள் ஜனாதிபதி நேபாளத்துக்கும் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேபாளப் பிரதமரை சந்தித்திருந்தார். இருவருக்குமிடையில் சுமார் ஒரு மணித்தியாலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக நேபாளத்தின் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இதன் போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நேபாளம் கடும் நிலநடுக்கத்தை சந்திக்க நேரிட்ட போது இலங்கையில் இருந்து கிடைத்த உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நேபாள பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் நேபாள பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.