வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இது குறித்து ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த குழுவின் ஆய்வுகளின் பின்னர் வழங்கப்படும் முடிவுகளின் பிரகாரம் இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்தியா, பங்களாதேஸ், இந்தோனிஷியா உட்பட பல ஆசிய நாடுகள் தமது பிரஜைகளுக்கு இவ்வாறு வாக்களிக்கும் சந்தர்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.
இலங்கையில் மாத்திரம் இன்னமும் அந்த சந்தர்ப்பம் வழங்கப்படாதுள்ளது. அதன் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
Editor