மத்திய மாகாணத்தின் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான ஹிந்தி வகுப்புகள் ஆரம்பம்!

மத்திய மாகாணத்தின் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான ஹிந்தி வகுப்புகள் ஆரம்பம்!

மத்திய மாகாண வர்த்தகம், வியாபாரம் மற்றும் சுற்றுலாத் திணைக்களத்துடன் இணைந்து மத்திய மாகாணத்தின் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான ஹிந்தி வகுப்புகள் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டன.

மத்திய மாகாண ஆளுநர்லலித் யு.கமகே, வர்த்தகம், வியாபாரம் மற்றும் சுற்றுலாத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் ஹிந்தி வகுப்புகளின் ஆசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது ஹிந்தி வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த பிரசுரங்களும் இதன்போது விநியோகிக்கப்பட்டன.