நான் மக்களுக்கு மாத்திரமே கட்டுப்பட்டுள்ளேன் - அமெரிக்காவில் அநுர

நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் வாழும் இலங்கை சமூகத்தினருடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தற்போதைய அரசாங்கம் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த அரசை தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியத் தயாராக இல்லை.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல், செயற்திறனான அரச சேவையை ஏற்படுத்துதல் மற்றும் மோசடி மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருதல், போதைப்பொருட்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் ஒரு வருட குறுகிய காலத்தில் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் தற்போதைய அரசாங்கம் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

நாடு எதிர்கொள்ளும் அடுத்த சவால், அடைந்த பொருளாதார வெற்றிகள் நாட்டு மக்களைச் செல்வதை உறுதி செய்வதாகும் என்றும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் அந்த நோக்கத்தை மனதில் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 