ஆட்சியிலிருந்து அகற்றும்வரை சர்வதேச சக்திகள் ஓயாது : கோட்டாபய விபரிப்பு
தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை சர்வதேச சக்திகள் ஒருபோதும் ஓயமாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை சர்வதேச சக்திகள் ஒருபோதும் ஓயமாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
'ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி' என்ற பெயரிலான கோட்டாபய எழுதிய புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் என்னை அதிபர் பதவியில் இருந்து அகற்றுவதற்காக வன்முறையுடன் கூடிய எதிர்ப்புகளையும் நாசகார செயற்பாடுகளையும் வகுத்து, அதற்கான நிதியுதவிகளை வழங்கினர்.
வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை, அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்.
மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் சதி மற்றும் நாசகார செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாம் பதவி விலகியதாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Editor