சம்பந்தனின் மறைவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல்!
இந்த கடினமான சூழ்நிலையை கடந்து செல்லும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகாலத் தலைவரும், இலங்கையின் நீண்டகால பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான, இரா.சம்பந்தன் காலமான செய்தியை கேட்டு நான் மிகுந்த கவலையடைகின்றேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
6 தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவான காலத்திலிருந்து அதன் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்து வருகிறார்.
இந்த கடினமான சூழ்நிலையை கடந்து செல்லும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என தனது அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார்.
Editor