நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில்  அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இன்று (29) அதிகாலை 2 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  மண் மேடுகளுடன் சேர்ந்து மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் நாவலப்பிட்டியின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.