மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் தொடர்ந்து மழையுடனான காலநிலை தொடர்வதால் எட்டு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீடித்துள்ளது.
இதன்படி, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
காலி மாவட்டம் - நெலுவ பிரதேச செயலகப் பிரிவு
களுத்துறை மாவட்டம் – இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவு
கண்டி மாவட்டம் – பஸ்பகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவு
கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகள்
மாத்தறை மாவட்டம் – கொட்டபொல மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம் – கலவான, எலபாத, பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, அயகம, எஹலியகொட, கிரியெல்ல மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்.
இதற்கிடையில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம் – சீதாவக பிரதேச செயலாளர் பிரிவு
காலி மாவட்டம் – எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவு
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவு
களுத்துறை மாவட்டம் – அகலவத்தை, மத்துகம, புலத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்.
கேகாலை மாவட்டம் – தெஹியோவிட்ட, யட்டியந்தோட்டை மற்றும் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுகள்
மாத்தறை மாவட்டம் – முலட்டியான மற்றும் அதுரலிய பிரதேச செயலாளர் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம் – கொலொன்ன மற்றும் இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Editor