ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஒன்றிணைந்து செயற்பட திடசங்கற்பம் கொள்வோம் - பழனி திகாம்பரம்
ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட திடசங்கற்பம் கொள்வோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்திருக்கும் தீபாவளி வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தீபாவளி என்பதே இருளாய் இருந்த நரகாசுரனை அழித்ததற்காய் கொண்டாடும் தீபத்திருநாளாகும்.
மலையக மக்களாகிய எம் வாழ்வில் அழித்தொழிக்க வேண்டிய இன்னும் பல இருள்கள் இருக்கின்றன. அவற்றினை இல்லாமல் செய்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக அரசியல் பிரதிநிதித்துவம் முக்கியம். அதற்கான வாய்ப்பு தற்போது உங்கள் கைகளில் உள்ளது. அதனை சரியான முறையில் சரியானவர்களை தெரிவு செய்வதன்மூலம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மலையக மக்களின் இருள் நிறைந்த வாழ்க்கையினை மாற்ற நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்காக தீபத்திருநாளான இன்று திடசங்கற்பம் கொள்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editor