“மலையகம் 200“ நிகழ்வுக்கு பிரதான விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள BJP யின் முக்கிய பிரமுகர்

“மலையகம் 200“ நிகழ்வுக்கு பிரதான விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள BJP யின் முக்கிய பிரமுகர்

“மலையகம் 200“ நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 2ஆம் திகதி (நாளைமறுதினம்) இலங்கைக்கு வரவுள்ளார்.

அவரது இந்த விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

அதேபோன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யும் இந்திய நிதி அமைச்சர் அங்கு  State Bank of India வின் கிளையொன்றையும் திறந்துவைக்கவுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பை ஏற்றே நிர்மலா சீதாராமன் இலங்கை வருவதுடன், இ.தொ.காவின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் எனவும் அறிய முடிகிறது.