புதிய தலைமுறையினருக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் - டில்ஷான்

புதிய தலைமுறையினருக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் - டில்ஷான்

”புதிய தலைமுறையினரை நாடாளுமன்றுக்கு இம்முறை அனுப்ப மக்கள் வாக்களிக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேசிய அமைப்பாளரும், களுத்துறை மாவட்ட வேட்பாளருமான திலகரத்ன டில்ஷான், தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்த அவர், முழு நாட்டு மக்களும் இன்று புதியவர்களைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள் எனவும, அதற்கு தற்போது சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் , ஐக்கிய ஜனநாயகக் குரல் மக்களின் குரலாக நாடாளுமன்றில் ஒலிக்கும் எனவும் தமது பயணத்தில் இளைஞர்களும் இணைந்துக் கொள்ள வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் செய்யும் நல்ல செயற்பாடுகளுக்கு தாம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்த அவர் அதேபோல, அரசாங்கம் செய்யும் பிழையான செயற்பாடுகளையும்  சுட்டிக்காட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.