இறுதி யாத்திரைக்கு ஆயத்தம் ; மக்கள் கடலில் விஜயகாந்த் உடல்

தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி யாத்திரைக்கு ஆயத்தம் ; மக்கள் கடலில் விஜயகாந்த் உடல்

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின்னர், சாலிகிராமத்தில் இருந்து தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து இன்று காலை 6 மணி முதல் சென்னை தீவுத்தீவுடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராதா ரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நடிகைகள் குஷ்பு, நளினி, நிரோஷா, இயக்குனர் சுந்தர் சி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. அஞ்சலி செலுத்தினார்.

இதைதொடர்ந்து தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இறுதி சடங்கிற்காக விஜயகாந்த் உடல் தீவுத்தீடலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.