ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் பணிபுறக்கணிப்பை கைவிட்டனர்!
ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் பணிபுறக்கணிப்பை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் இன்று (ஒக்டோபர் 05) காலை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை ரயில் வீதியின் நுழைவாயிலில் வைத்து ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர், உப கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Editor