சாகலவுக்கு புதிய பதவியை வழங்கும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை வழிநடத்தும் தலைவராக சாகல ரத்நாயக்கவை எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வழிநடத்தும் அதிகாரியாக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்.
அதன் காரணமாக கல்வி அமைச்சின் தற்போதைய செயலாளர் நிஹால் ரணசிங்கவை ஜனாதிபதி செயலகத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்க ஜனாதிபதி ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை வழிநடத்தும் தலைவராக சாகல ரத்நாயக்கவை எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நிஹால் ரணசிங்க குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளராகவும் கடந்த காலத்தில் பணியாற்றியிருந்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஆரம்பித்துள்ளது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பரந்தப்பட்ட கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துள்ளன.
ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன மற்றும் ஐ.தே.க தலைமையில் பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மேற்கொள்வதுடன், குறித்த கூட்டணியின் பொது வேட்பாளராக களமிறங்கவும் ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாக ஜனாதிபதியின் நம்பிக்கையின் பாத்திரமாக உள்ள சாகல ரத்னாயக்கவை தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை வழங்கவும் ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஆளுங்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Editor