உடவலவ அணைக்கட்டு ஊடான வீதிக்கு பூட்டு
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக உடவலவ அணைக்கட்டு ஊடாக உள்ள வீதி இன்று (15) முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை பல கட்டங்களாக குறித்த வீதி மூடப்படும் என இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 22 ஆம் திகதி வரை வீதி முழுமையாக மூடப்படும் என்பதோடு டிசம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி 6 ஆம் திகதி வரை அதன் ஒரு வழிப்பாதை மூடப்படவுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி முதல் ஜனவரி 14ஆம் திகதி வரை மீண்டும் வீதி முற்றாக மூடப்படும் என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் உடவலவ அணைக்கட்டு ஊடான வீதி எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்படவுள்ளது.
வீதி மூடப்படும் காலப்பகுதியில் உடவலவ, எம்பிலிப்பிட்டிய ஊடாக 13ஆவது மைல்கல் வரையான வீதியை மாற்று வீதியாகப் பயன்படுத்த முடியும் என இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Editor